தினமும் யோகா

 

 

யோகாசனம் செய்வதால் உடல் ஆரோக்கியம் பெருவதுமட்டும் இல்லாமல் ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு, மனஅமைதி பெறுகிறோம்.


யோகாசனம் செய்வதற்கு சரியான நேரம் காலைநேரம், காரணம் காலை நேரத்தில் உடல் சுறுசுறுப்புடன் மனம் தெளிவாக இருக்கும். காலைகடன்களை முடித்துவிட்டு பின் பச்சை தண்ணீரில் குளிக்கவும் அல்லது மிதமான நீரில் குளித்தபின்பு நாம் யோகாசனம் செய்யலாம். ( பச்சை தண்ணீரில்  குளித்தால் மிகவும் நல்லது ) ஒரு டம்ளர் தண்ணீர் மட்டுமே குடித்தால் போதுமானது மலை நேரத்திலும் யோகாசனம் செய்யலாம் கண்டிப்பாக உணவு உண்ணகூடாது வெறும் ( காலி வயிறாக ) வயிறாக இருக்கவேண்டும் . . .

 


 

 


பத்மாசனம் செய்யும் முன் தரையில் நேராக அமர்ந்து  இரண்டு கால்களை
நேராக முதலில் நீட்டிகொண்டு வலது காலைமடக்கி இடது தொடையின் மேலும், இடது காலைமடக்கி வலது தொடையின் மேல் வைத்து படத்தில் உள்ளவாறு வைத்துக்கொள்ள வேண்டும், எந்த கால்களை வேண்டுமானாலும் முதலில் மடக்கிவைக்கலாம்.

பத்மாசனத்தில் அமர்ந்த பின்பு உடல் நேராகவும் பார்வை நேராகவும் இருக்கவேண்டும் உடலை இருக்கி படித்தவாறு இருத்தல் கூடாது நேராக அமர்ந்து சுவாசம்( மூச்சு ) மெதுவாக விடவேண்டும். யோகாசனம் செய்யும் போது நம் உடலின் ஒவ்வொரு அசவைகளையும் நாம் உணரவேண்டும் அபோது தான் ஒவ்வொரு ஆசனம் செய்யும் போதும், நாம் உடலின் மாற்றங்களை அறிய முடியும், கைகளை நீட்டியவாறு சின் முத்திரையில் கைகளை வைத்துகொள்ள வேண்டும், மனதை ஒருநிலை படுத்தி 5 முதல் 10 நிமிடம் வரை இருக்கலாம்

ஒவ்வொரு ஆசனம் முடித்ததும் கைகளை, கால்களை மெதுவாக விலகக்கவேண்டும் வேகமாக எடுக்ககூடாது  ஒவ்வொரு ஆசனம் செய்யும் போது கால இடைவெளி இருத்தல் வேண்டும் கட்டாயம் மெதுவா செய்யவேண்டும் ஒவ்வொரு ஆசனம் செய்யும் போது உடல்வேர்வை நிலை வரும் அளவிற்கு கடினமாக கஷ்டப்பட்டு செய்தல் கூடாது செய்ய முடியாத நிலையில் 2 அல்லது 3 நிமிடம் ஓய்வெடுத்து பின் தொடரலாம்

பத்மாசனம் செய்வதால் நியாபசக்தி அதிகமாகும், முதுகுத்தண்டு வலுப்படும் மற்றும் தொப்பை குறையும்.

 


 

வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள், இந்திரன் வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயர் வஜ்ராயுதம், பல ஆண்டுகள் நன்கு வளர்ந்து விளைந்து பருத்து பெருத்த மரத்தை வெட்டினால் அதன் நடுவில் கருமையான ரேகைகள் உடன் கூடிய தண்டு பாகம் தெரியும் இதை வஜ்ரம் பாய்ந்த கட்டை என்பார்கள், அப்பகுதியை சாதாரணமாக கோடாரியால் வெட்டுவதும், உளியினால் செதுக்குவதும் மிகவும் கடினம், அவ்வளவு அடர்த்தியாக இரும்பை போன்று அப்பகுதி இருக்கும், நம் உடலை வஜ்ரம் போல் வைத்திருக்க இந்த வஜ்ராசனம் உதவுகிறது.

உடம்பில் 108 வர்ம ஸ்தானங்கள் உள்ளன, இதில் புட்ட பகுதில் உள்ள வர்மங்கள் ஜீரண மண்டலத்தை இயக்குகின்றன, வஜ்ராசனத்தில் அமரும் போது இந்த வர்ம பகுதி நன்கு அழுந்துவதால் இறைப்பை, சிறுகுடல், பெர்குடல், மலக்குடல், கல்லீரல், கணையம், பித்தப்பை ஆகிய அணைத்து ஜீரண உறுப்புகளும் துடிப்போடு இயங்கி வலிமை அடைகின்றன. காலிலுள்ள தசைகள் வலுப்பெறுகிறது, காலிலுள்ள  மூட்டுத் தசைகள் வலுவடைகின்றது.

 


 

 

 

 

 

 


 

 

 

 

 

 

விரிப்பில் குப்புறப் படுத்துக் கைகளால் காலை மடக்கி பிடிக்கவும் . சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் காலை இழுத்து தலையையும் கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை வில்போல் வளைத்து நிற்கவும். தனுர் என்றால் வில் எனப் பொருள். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 5 தடவை செய்யவும். தொடக்க காலத்தில் காலை விரித்துச் செய்யவும். பின் மிக மெதுவாகச் சுருக்கவும்.

பலன்கள்:

முதுகெலும்பின் வழியாக ஓடும் அனைத்து நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. இரைப்பை, குடல்களிலுள்ள அழுக்குகள் வெளியேறும். ஜீரண சக்தி அதிகப்படும். சோம்பல் ஒழியும். கபம் வெளிப்படும். தொந்தி கரையும். மார்பகம் விரியும். இளமைத் துடிப்பு உண்டாகும்.

அஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தொந்தி, வயிற்றுக் கொழுப்பு, ஊளைச் சதை நீங்கும். மூலபவுந்திரம், நீர்ரோகம், நீரிழிவு நோய் நீங்கும், பாங்கிரியாஸ் சிறுநீர்க் கருவிகள், ஆண்களின் டெஸ்டீஸ், பெண்களின் ஓவரி. கர்ப்பப்பை நல்ல இரத்த ஓட்டம் ஏற்பட்டு பலம் பெறும். இளமைப் பொலிவு உண்டாகும், பெண்களின் மாதவிடாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Advertisements