பயணம் கற்றுதரும் பயணிக்க கற்றுக்கொள்

பயணம் கற்றுதரும் பயணிக்க கற்றுக்கொள்

யணம் மனிதர்களை மலரச் செய்கிறது, இது என்னுடைய ஊர், இது என்னுடைய நகரம், இவர்கள் என்னுடைய மக்கள் என்கின்ற சிறிய வட்டம் உடைந்து சிதறும். இந்த உலகம் பிரமாண்டமானது, இதில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள், வித விதமான தாவரிங்கள் இருக்கின்றன, மிக உயர்ந்த மலைகள் இருக்கின்றன, பொங்கும் ஆறுகள் இந்த பூமியை சுற்றி வருகின்றன என்றெல்லாம் தெரியவரும். இடம் விட்டு இடம் மாறுவது இருக்கதைக் குறைப்பது மட்டும் மல்ல “என்னுடைய இடம்” என்கின்ற இறுமாப்பையும் குறைக்கிறது. இடம் விட்டு இடம் பெஎர்கின்றபோது வேறு ஒரு உலகம் தன் உள்ளே விரிகின்றது விரிகிறது.

என்னுடிய ஊரிலுள்ள பறவைகள் போல அல்லாமல் இங்கு வேறு பறவைகள் இருக்கின்றன. கங்கை நதிக்கரை மீன்கள் பெரியவை, காவேரி மீன்கள் சிறியவை, நீளமான மூக்குடைய கொக்குகள் இமையமலை அடிவாரத்தில் நிறைய இருக்கிறது. அன்னபட்சி, மானசரோவர் ஏரியிலே கண்கொள்ளாக் காட்சி. தெற்கில் இருந்து வடக்கே போகப்போக சேறு நிறைந்த வயல்களும், உயர்ந்த திண்மையான மரங்களும், அடர்ந்த வனங்களும் தென் படுகின்றன என்பதும் புரிகிறது.

மனித நாகரீகம் அடைய அடைய, பயணம்தான் அவனுக்கு லட்சியமாக இருக்கின்றது. பயணப்படுவது தான் மிகசிறந்த வாழ்க்கையாக இருக்கிறது. கடல் பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பாவில் இருந்தும் தெற்கு ஆசியாவில் இருந்தும் அரேபியாவில்ருந்தும் வணிகர்கள் இந்தியா எங்கே இருக்கின்றது என்று தேட, அது வீரதீர செயலாகவே பேசப்பட்டது. அம்மாதிரி வீரதீரத் தேடு கடல் கடந்து பல துன்பங்கள் தாங்கி வேறு  தேசங்களுக்குப் பொய் திரும்பி வருவதை பார்த்து சந்தோசித்தும், சபாசித்தும், தங்களுடைய செல்வதை அதிகரிப்பதற்கு வழிதேடியும் அரசர்கள் அம்மாதிரி ஆட்களை ஊக்கப்படுத்தினார்கள்.
போர்த்துகீசிய மக்களுக்கு கடற்பயணம் மிக முக்கியமான, வாழ்க்கையின் அங்கமாக இருந்தது. கடற்பயணம் மேற்கொண்டு திரும்பினால் அவனுக்கு ஊரில் மரியாதை இருந்தது. அதேபோல தென்இந்தியாவில் இருப்பவர்க்கும் பயணப்பட்டு திரும்பி வந்தால் மிகப்பெரிய மரியாதை இருந்தது. தென்இந்திய மக்கள் கடற்கரையோரமாகவே போய், பிறகு அடர்ந்த கானகங்களுக்குள் புகுந்து கங்கை நதிக்கரையை தொட்டு, அங்கிருந்து நேரே போய் காசி தேசத்திற்கும், இன்னும் சற்று மேலேறி
இமயமலைக்கும் பயணப் பட்டார்கள். இமயமலைத் தொடரை பார்த்து விட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

வடபுலத்து மன்னர்களோ தெற்கேயுள்ள அடர்ந்த கானகங்கைகளை தங்களுடைய வீரத்தை நிலைநாட்டுகின்றகாலமாக எடுத்துக்கொண்டார்கள். ராமேஸ்வரம் வருவதை தங்கள் வாழ்நாள் சாதனையாக நினைத்துக்கொண்டார்கள். அரசர்களும் வீரர்களும் மட்டுமல்ல, ஞானிகளும், ஆசார்ய புருஷர்களும் தங்கள் அறிவை விருத்தி செய்துகொள்ளவும் வேறு தேசங்களில் கிடைக்கின்ற முக்கியமான தத்துவங்களை அறிந்து

கொள்ளவும், புத்தகங்களைப் படிக்கவும் பயணப்பட்டார்கள். இந்தியா என்கின்ற நாடு செழிப்பாக இருப்பது கண்டு அரேபிய பாலைவனத்திலிருந்து துருக்கர்கள் நல்ல குதிரைகளோடு இங்கு வந்து வியாபாரம் செய்துவந்து, இந்திய தேசத்தின் செழுமையைக் கண்டு, பிறகு கணவாய்களைத் தாண்டி பெரும்படையோடு நுழைந்து மெல்ல மெல்ல இந்த தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அதற்குப்பிறகு கடல்மார்க்கமாக வந்த போர்த்துகீசியர்களும் பிரஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவை வளைத்து முன்னேறி தங்களுடைய ராஜியத்தை ஸ்தாபித்தார்கள். மிகப்பெரிய கலாச்சாரங்கள் அடுதுத்தடுத்து புகுந்து தேசத்தினுடைய உருவை மாற்றியது.

இப்போது செல்வம் தேடவோ, நாடு பிடிக்கவோ, புத்தகம் படிக்கவோ பயணப்பட வேண்டிய அவசியமில்லை. மாறாக வேறு இடத்தினுடைய மக்களின் வாழ்க்கை முறை, மொழியின் வளம், உடுப்பு, உணவு, பல்வேறு ரசனைகளை அறிவதற்காகப் பயணித்தல் முக்கியமாக நடைபெறுகின்றது. பயண வசதிகளும் முன்னேறி விட்டன. பயனப்படுதல் என்கிற விசயம்

பயனப்படுதல் என்கிற விஷயம் இல்லையெனில் புகைவண்டி தொடரோ, பேருந்தோ, மகிழ்வுந்தோ அல்லது ஆகாய விமானமோ கண்டுபிடிக்கப்பட்டுஇருக்காது. இப்போது பயணம் மிக சுகமானதாகவும், எளிதானதாகவும் மாறிவிட்டது. திட்ட மிட்டல், இன்னும் சிறப்பாக  பயணம் செய்ய முடிகின்றது. தங்குமிடங்களும் பயணிகளுக்காக ப்ரித்யோகம் கவனிப்பு உள்ளன.

பயனப்படுதல் என்கிற விஷயம் இல்லையெனில் புகைவண்டி தொடரோ, பேருந்தோ, மகிழ்வுந்தோ அல்லது ஆகாய விமானமோ கண்டுபிடிக்கப்பட்டுஇருக்காது. இப்போது பயணம் மிக சுகமானதாகவும், எளிதானதாகவும் மாறிவிட்டது. திட்ட மிட்டல், இன்னும் சிறப்பாக  பயணம் செய்ய முடிகின்றது. தங்குமிடங்களும் பயணிகளுக்காக ப்ரித்யோகம் கவனிப்பு உள்ளன.
Advertisements

சிந்தனை செய்…

மௌனம் கற்றுக்கொடுக்கும்ந்த உலகம் இரைச்சல் மிகுந்தது. எந்நேரமும் எல்லா காலத்தில்லும் ஏதாவது கூச்சலும் குழப்பமுமாகவே இருப்பது. அழுகை சதம்மும், அலறல் சத்தமும், ஆங்கார கொக்கரிப்பும், அவசரமும், அதட்டலும் மிகுந்தது. மிருகங்கள் இரவில்  மட்டும் இரைக்காக கூச்சலிடும். ஆனால், எல்லா காலத்திலும் மனிதர்களின் கூச்சல் உலகத்தை இடையறாது அசைத்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்தக் கூச்சலுக்கு நடுவே, இந்த சந்தடிக்கு நடுவே, மௌனமாக இருத்தல் என்பது முடியுமா? இந்தக் கேள்வியை கேட்டுகும்போதே, எதற்கு மௌனமாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் வரும்.

சிறிது நேரம் மௌனமாக இருந்தாலும் போதும், சுற்றி உள்ள மனிதர்களிடமிருந்து எழும்புகின்ற கூச்சல்கள் ஆச்சர்யத்தை தரும். சற்று உள் திரும்பி பார்த்தால், இப்படிதானே நானும் அலட்டி இருக்குறேன், என்று நம்மை நாமே பார்கின்ற எண்ணம் ஏற்படும். நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன பேசவேண்டும், எதை எப்படி ஏற்க வேண்டும், எதை விலக்க வேண்டும் என்ற தீர்வும் ஏற்படும்.

இதற்கு மெளனமாக இருப்பது உதவும். மெளனமாக இருப்பது எளிதா? எப்பொழுது மௌனத்தை ஆரம்பிக்கிறோமோ அப்பொழுது, ‘இதைப்  பேச வேண்டுமே, இதை சொல்லாமல் இருந்து விட்டோமே, இந்த ஒரு தொலைபேசி தொடர்புடன் மட்டும் பேசி விடலாமே’ என்று பல சருக்குதல்கள் ஏற்படும். மெளனமாக மூன்று நிமிடம் இருக்கும்போது நான்காவது நிமிடத்தில் மௌனம் பறந்து போய்விடும். யாரோ வந்து நலம் விசாரித்தால் போதும், உடனே பல்தெரிய சிரித்து, எழுந்து நின்று கைகுலுக்கி தொடர்ந்து பேச ஆரம்பித்து விடுவோம். ‘மெளனமாக இருக்கத்தான் போகிறேன். என் மௌனத்தை எதுவும், எவரும் கலைக்க முடியாது’ என்ற உறுதி மிக முக்கியம். “ஒரு காதல் படம் பார்த்தேன். ரெண்டரை மணிநேரம் நான் பேசவே இல்லை. படம் முடிஞ்ச பிறகும் பேசலை. மூன்று மணிநேரம் மௌனமாக இருந்தேன்” என்று சொல்வோம் என்றால் இதில் மிகப்பெரிய தவறு இருக்கிறது.

படம் பார்க்கும்போது நம் மனம் பெரும் கூச்சல் போட்டிருக்கும். அழுதிருக்கும். தலையில் அடித்துக்கொண்டு விம்மி இருக்கும். எகிறி வசனங்கள் பேசி இருக்கும். வெட்டி வீழ்த்த வேண்டுமென்ற வேகம் வந்திருக்கும். இவையெல்லாம் மௌனத்தின் அறிகுறிகள் அல்ல; உள்ளுக்குள்ளேயே கேட்டு இருந்த உரத்த குரல். நாகரீகம் கருதி வெளிப்படாத குரல்.

மௌனம், பேசாதிருப்பது மட்டுமல்ல. சுற்றி இயங்கும் உலகத்தை துடிப்போடு கவனிதிருப்பதும் கூட. அப்பொழுது உலகத்தின் எல்லா நடவடிக்கைகளின் உள்நோக்கமும் தெளிவாக தெரியும். ‘ஒழிக…’ என்று கூச்சலிட்டு ஊர்வலம் போகிறவருடைய, அல்லது ‘வாழ்க…’  என்று துள்ளித் துள்ளி வாழ்த்துபவருடைய நடவடிக்கைகளின் உண்மையான அர்த்தம் தெரியும். இந்த கவனிப்பில் ருசி வந்துவிட்டால், மௌனமாய் இருப்பதும், இப்படி கவனித்துப் பார்ப்பதும் பிடித்துப்போய், பழக்கமாகவும் ஆகிவிடும்.

ப்படி மெளனமாக இருக்க முடியாதபடி எது தடுக்கும்? பழக்கமின்மைதான். கூச்சலிட்டு, எப்போதுமே உரத்துப்பேசி, எல்லாவற்றியுமே அதட்டலாக, அலட்டலாக பகிர்ந்துகொண்டு அதுவே இயல்பாகிவிட்டதல்லவா? அதிலுருந்து மௌனத்திற்கு வருவது கொஞ்சம் கடினம்தான். திமிருகின்ற குதிரைக்கு லகான் போடுவதுபோல அமைதியாக மனதை இழுத்துப் பிடித்து, ‘சற்று நேரம் அமைதியாக இரு’ என்று உத்தரவிட வேண்டும். இது எளிதில் கைவாரது. தடுமாறினாலும் திரும்பத் திரும்ப மனதை மௌனத்திற்கு பழக்கப்படுத்த வேண்டும். உள்ளுக்குள்ளே நம் மனம் கூச்சல் போடத் துவங்கும்.

‘அவனை நாலு வார்த்தை கேட்காது விட்டுட்டேன்’ என்று ஏதோ ஒரு பழைய விஷயத்தை நியாபகம் வைத்துக்கொண்டு சீறத் துவங்கும். இந்த தடவை கேலி பண்ணா விடக்கூடாது. பதிலுக்கு தீய்சுடனும் என்று இன்னொரு வன்மம் வரும். ‘இன்னொரு தடவை பேசிப் பார்த்து நிஜமாவே அந்தப் பொண்ணு ரெண்டாங் கேட்டானான்னு தெரிஞ்சுக்கணும்’ என்று அபத்தமான ஆவல் ஒன்று அதிகரிக்கும் போதும் யோசித்தது என்று மனதை தட்டிகொடுத்து மெல்ல திசை திருப்ப வேண்டும்.
ப்படி மெளனமாக எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்? இதற்கு வரைமுறை ஏதும் கிடையாது. மூன்று நிமிடம் இருந்தால் அது எந்தவித பலனையும் தராது. பத்து நிமிடங்கள் இருப்பது மெல்லிய தாக்கத்தை ஏற்படுத்து. மறுபடியும் மௌனம் தேடும் ஆவலை ஒருவேளை அது ஏற்படுத்தலாம். அரைமணி நேரம் எவரோடும், எந்தத் தொடர்புமில்லாமல் உள்ளுக்குள்ளேயும் குதிக்காமல் ஏதேனும் ஒரு இடத்தில் தனியாக உட்கார்ந்துகொண்டு, சூழலோடு மனதை லயிக்க விட்டால், அதில் தனி ருசி ஏற்படும்.

மெளனமாக இருக்கும்போது ஏற்படும் உடனடிமாற்றம் என்ன?

சுவாசம். அது மிகச்ச்சீரவதை நீங்கள் உடனடியாக உணர்வீர்கள். மார்புப்படம் விரிந்து நிறைய மூச்சு இழுத்து நிதானமாக வெளியிடுவது, மிக இயல்பாக எந்த முயற்சியும்மின்றி நடக்கும்.
இதனுடைய பலன் என்ன?

கண்களில் பிரகாசம் தோன்றும். கன்னைங்களில் ஒரு பூரிப்பு எழும். உதட்டில் மெல்லிய நிம்மதியான புன்னகை வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த அமைதி எனக்குப் பிடித்திருக்கிறது என்கின்ற எண்ணம் எழும்.

இதற்கு அடுத்தபடி யாரிடமும் அளவோடு பேசுவோம். பல கேள்விகளுக்கு பதிலே சொல்ல மாட்டோம். நமக்குள் சில கேள்விகள் எழுந்தாலும் கேட்கமாட்டோம். எதிரே இருப்பவரைவிட நாம் கொஞ்சம் உயரம் அதிகம் என்ற எண்ணம் நிச்சயம்ஏற்படும். அரைமணி நேர மௌனமே இந்த நம்பிக்கையை கொடுக்குமென்றால், வாழ்வின் பெரும்பகுதியை மௌனமாகக் கழித்தால் என்ன என்ற நம்பிக்கை ஏற்படும். சிநேகிதர்களை விட்டு விட்டு மெளனமாக இருக்கே முடியுமா என்று நினைக்கிறீர்களா?

இதுவும் தவறில்லை. ஆனால், ஏதோஒரு காலகட்டத்தில் நாம் சிநேகிதர்களை உதறிவிட்டு இந்த மௌனத்திற்கு தள்ளப்படுவோம். அபோதாவது மௌனத்தை இருக்கப் பிடித்துக்கொண்டால் நல்லது. மெளனமாக இருந்து பார்த்தல் என்ன என்கின்ற எண்ணம் ஏற்படும்போது, அதற்கான இடத்தையும் நேரத்தையும் விரைவாகத் தேர்ந்தெடுத்து, செயலில் இறங்கி விடுவோம். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள், ஒரு வாரம், பாத்து நாளைக்குப் பிறகு உடம்புக்கு இப்படி தனியே அமர்ந்திருப்பது பழக்கமாகிவிடும்.
” அதெல்லாம் என்னாத்துக்கு? சாப்டோமா, வேலைக்குப் போனோமா, தூங்கினோமா, சினிமா பார்த்தோமா ” என்று வாழ்வில் சோம்பலோடு அணுகினால் ஞானத்தின் நிழல் கூட மேலே படியாது.

இது என்னாலும் முடியும் என்று இறங்க வேண்டும். என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிக உத்தமம். முடியாது என்று நினைப்பது நம்மைப் பற்றிய நம் மதிப்பீடே  மரியாதை இல்லாதது இருக்கிறது என்ற அர்த்தம். நிச்சியம் முடியும். அட, மண்ணில் தெரியுது வானம். இது நம் வசப்படலாகதோ? வானம் எங்கோ இல்லை. மிக அருகிலே இருக்கிறது. வானத்தை நாம் ஜெய்க்க முடியாதா? முயற்சித்தால் முடியாதது இல்லை. முயற்சிப்போம்…

நன்றி தினகரன்

 

 

 

 

 


 

உண்ணக் கற்றுக்கொள்…

 


 


 

 

 

 

ட்டகாசமாய் உண்பதற்கு ஒரு வயதிருக்கிறது. பத்திலிருந்து பதினைந்து இட்லிவரை தேங்காய் சட்னி, வெங்காய சாம்பார், நேற்றிய வதக்குழ்ம்புடன் புரட்டிச் சாப்பிட ஒரு வயதிருக்கிறது. சாப்பிட்டுவிட்டு களைப்பு தீர கொஞ்சம் நேரம் உட்கார்ந்தோ, அல்லது வானொலி கேட்டோ, பிறகு மெல்ல வெளியே கிளம்பி நடந்து தெருவிலுள்ள சிநேகிதர்களை சந்தித்து, அந்த சிநேகிதனோடு நடந்து இன்னொரு தெருவில் உள்ள சிநேகிதனை சந்தித்து, மூவரும் நாலாவது சிநேகிதனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்து மைதானத்திற்குப் பொய் ஒரு மணி நேரம் விளையாடி, பிறகு மரக்கிளையில் தொங்கி, வராண்டாவில் ஓடி, மாடிப்படியில் ஏறி இறங்கி வீட்டிற்கு வரும்போது அத்தனையும் ஜீரணமாகியிருக்கும்.

 

 

 

 

 

 

 

 

ஆனால், இளம் பருவத்தில் பதினைந்து இட்லி சாப்பிடும் பாக்கியம் வெகு சிலருக்கே கிடைக்கிறது. ஒரேயொரு தூத்பேடாவை வாரம் ஒருமுறை வாங்கி வந்து அதை மூன்று குழந்தைகளுக்கு மூன்றா அரிந்து கொடுத்து, ‘ இதுதான் இனிப்பு ‘ என்று ஒரு தகப்பனால் கொடுக்க முடிகின்றது. இதற்கு மாறாக நாற்பது வயதும், சின்ன சின்ன வெற்றிகளைத் தாண்டி, சொந்த வீடு, மனைவி, குழந்தைகள், சமூக அந்தஸ்தும் வரும்போது கையில் கொஞ்சம் காசு இருக்கும்.  அரை கிலோ ஜிலேபி, அரை கிலோ வெங்காய பக்கோடா என்று வாங்க முடியும்.

ஆனால், ஐந்து ஜிலேபியைத் தின்ன முடியுமா? தின்ன வசதியிருக்கலம். ஆனால் தின்னக்கூடாது. வயிற்றில் சிக்கல் ஏற்பட்டால், மூன்று நாளைக்கு மந்தம் வேதனையை ஏற்படுத்தும். வயிட்ற்று வலி, தலைவலி, மூச்சுத்திணறல், நெஞ்சில் முள் குத்தும் வலி என்றெல்லாம் ஏற்படுகிறது. இதய நோயோ என்று பயந்து மருத்துவரிடம் ஓட, ” இல்லை. உங்கள் வயிறு சரில்லை. பானைபோல் இருக்கிறதே ” என்று தட்டி தனியாக சத்தம் காட்டுவார்.

இந்த வேதனை வராதிருக்க வேண்டுமெனில் ஒருவர் உண்ணக் கற்றுக்கொள்ள வேண்டும். தட்டு நிறைய மோர் சாதமோ, தொட்டுக்கொள்ள தேங்காய் துவையலோ, ரச வண்டியோ அமிர்தம். சுத்தமாக ஜீரணமாக வேண்டும். வசதி இல்லாதபோதுதான் மோர் சாதம். வசதி வந்துவிட்டது. செட் தோசை, மசால் அய்டங்கள் என்று உண்டுவிட்டு, உட்கார்ந்து வேலை செய்கிறபோது செரிப்பதில்லை. உணவு என்பது ஜீரணமாக வேண்டும். ஜீரணமாகாத எந்த உணவும், மோர் சாதமாக இருந்தாலும், அது விஷம். வயிறு இலைபோல ஆகும்படியாக விஷர்ஜனம் இருக்க வேண்டும். இப்படி நன்றாக காலியானால்தான் சுகமாகத் தூக்கம் வரும். தன்னுடைய வேலையென்ன, அதற்கேற்ற உணவு எது என்று தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

கட்டடம் கட்டும் வேலையா? பல மாடிகள் ஏறி இறங்கி, பலமுறை மேலும் கீழும் நடந்து, இரவு வரை கால்கடுக்க நிற்கின்ற தொழிலா? கொஞ்சம் மாமிசத்தோடு கூடிய நல்லா சாப்பாடு அவசியம். ஆறு இட்லி வரைக்கும் கூட போகலாம். இருசக்கர வாகனத்தை பழுது பார்கிரவரா, ஒரு நாளைக்கு பாத்து வாகனம் ஓட்டிப் பார்ப்பவர, உடம்பு அதிர்ந்து போகின்றவரா, அப்படியானால் நல்ல உணவு தேவை. தொலைக்காட்சி பெட்டி பழுது பார்கின்றவருக்கு இந்த உன்வவு தேவைப்படாது. அலுவலகத்தில் கூட்டிக் கழித்து கணக்கு போடுகின்றவர்க்கு இன்னும் குறைவாகத்தேவை. வெகுதூரம் கார் ஓட்டுகிறவர், மற்ற எல்லோரையும் விட உணவில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அரை வயிறு சாப்பிட்டால்தான் கண் அசராது. என்றைக்கு வேலை இல்லையோ அன்றுதான் முழு வயிறு சாப்பிட முடியும்.

உணவு என்பது நம் உழைப்பின் நிமித்தம் ஏற்படுவது. அப்படிதான் ஐம்பது வருடங்களுக்கு முன்பு வாழ்க்கை இருந்தது. பழைய சோறு, தயிர் சாதமும், இஞ்சி ஊறுக்காயும், பிரண்டைத் துவையலும், முருங்கை குழம்பும், கீரை மசியலும், பூண்டு ரசமும், தேங்காய் துவையலுமாக உணவு சுவையாகவும் எளிமையாகவும் இருந்தது. நல்ல உணவாக இருந்தால் அற்புதமாக ஜீரணமாகிறது. முடி சீக்கிரம் நரைக்கவில்லை. அதிக தள்ளாட்டமில்லை. ஆனால் இன்று உணவு சரியானபடி இல்லாததுதான் சிக்கல். ஏகப்பட்ட கோதுமை பண்டங்கள். எல்லாம் எண்ணையிலோ, நெய்யிலோ பொரிந்தவை. வாயுவை உற்பத்தி செய்யும் கிழங்குகளுக்கு ருசி கூட்ட காரங்களும், மசாலாக்களும் அதிகம். பொறித்த எண்ணையின் கொழுப்பு மட்டுமல்லாது, பீட்ஸா போன்றவற்றில் பால் கொழுப்புகள் தடவப்படுகின்றது. கொழுப்பு ஜீரணமாக, தினமும் எட்டு கிலோ மீட்டர் ஓட வேண்டும். ஆனால் இரண்டு கிலோ மீட்டர் பயணமும் இருசக்கர வாகனத்தில்தான் அமைகின்றது. அந்தகக் கொழுப்பு எப்படி கரையும்? எங்கேயோ உடம்பில் தங்கி சதைபோட்டு பருமனாகி, மூச்சிரைப்பு கொடுத்து, இதயத்திலும் தொந்தரவுவந்துவிடுகிறது.

உணவைத் தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். இதை அடுத்தவரிடம் கேட்டுக்கொண்டிருக்கவேண்டம். நம் உடம்புக்கு என்ன வேண்டுமென்று நம் மனதிற்கே நன்கு தெரியும். ஒரு பிளாஸ்டிக் பையில்எட்டு மாதத்திற்கு முன்பு அடைத்த உருளைக்கிழங்கு சிப்ஸ், திறந்த உடனேயே சிக்கு நாற்றம் அடிக்கின்றது. விஷமாகிவிட்டது வாசனையிலேயே தெரிகிறது. ஆனால் மசாலா நெடியில் விஷம் மறந்துபோய் விடுகிறது. எப்படி உண்பது என்பதும் ஒரு முக்கியமான விஷயம்.
கோபமே இல்லாமல், உணர்ச்சிவசப்படாமல் உண்ண வேண்டும். ஐந்து நிமிடத்துக்குள் உண்பதை முடித்துவிட வேண்டும். வெளிச்சமான இடத்தில் உண்ணும் பொருட்களோடு மனம் லயித்து, ருசித்து உண்ண வேண்டும். உண்ணும்போது தண்ணீர் குடிக்ககூடாது. உண்ட பிறகு உறங்ககுடாது. உட்கார்ந்திருக்க வேண்டும். இரண்டு வெற்றிலை ஜீரண சக்தியை அதிகபடுத்தும். வயதானவராக இருந்தால் உண்ட களைப்பில் சற்று நேரம் கண்மூடி உட்கார்ந்திருக்கலாம்.

ஆனால் இன்று டி.வி. பார்த்துக்கொண்டு உண்பது என்று வந்துவிட்டது. தொலைக்காட்சியின் கோபதாபங்களும், ஆத்திர அவசரங்களும் நம் மனதை பாதித்து உண்ணுதலை சிதைக்கின்றன. இல்லையெனில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் எதிரே இருபவர்முகம் கூடத் தெரியாத இருட்டில், சாப்பிடுவது வெந்துறிக்கின்றதா என்றும் தெரியாமல் உண்கின்றோம். தெருமுனையில் திரும்பத் திரும்ப சுட்ட எண்ணெயில் தயாராகும் பலகாரத்தை பசில்லாமல் உண்கிறோம். உடலுழைப்பு என்பது அறவே இல்லை. கடற்கரையோரம் நடக்கப் போய்விட்டு அரட்டை அடிக்கிட்ற சுகத்தில் நடைப்பழக்கம் மறந்து போகிறது. நடந்தது போல ஒரு நினைப்பு மட்டுமே ஏற்படுகின்றது. அது ஜீரண சக்திக்கு உதவாது. தவறான உணவுப் பழக்கங்கள் முப்பதந்தைந்து, நாற்பது வயதில் கிழத்தனத்தை ஏற்படுத்தி விடுகின்றன. வாரம் தவறாமல் மருத்துவருக்கு எதிரே உட்காரவேண்டி இருக்கிறது. மிக முக்கியமான விசயம், பசிக்கின்றபோது உண்பது.

அடுத்தவேளைக்குப் பசிக்க வேண்டுமே என்று அளவாக உண்பது. நல்ல உணவு என்பது ஆரோக்கியம். ஆரோக்கியம் என்பது சந்தோசம். சந்தோசம் என்பது பதட்டம் இல்லாத அமைதி. உணவு சரியில்லை  எனில், மனசு சரியில்லையெனில், வெகு நிச்சியமாய் பதட்டம்தான் ஆக்கிரமித்து கொள்ளும். தானும் பாழாகி தன் சூழ்நிலையும் பாழாவதற்கு உணவில் கவனம் செலுத்தாததேகாரணமாகிவிடும். எனவே உண்ணக்க் கற்றுக் கொள்ளுங்கள். எதுவோ தின்னுட்டு எங்கேயோ ஓடறோம் சார், இதெல்லாம் எப்படி கடைபிடிக்கரதுன்னே தெரியலை என்று மனம் புளுங்குகிறீர்களா? இல்லை. கொஞ்சம் யோசித்தால் மாறுதல் நிச்சியம் ஏற்படும். நம்பிக்கை முக்கியம்…